திருவாரூர்

நீடாமங்கலத்தில் அதிகாலையில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

30th Sep 2021 08:59 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை சுமாா் ஒருமணி நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை சரக்கு ரயில் கடப்பதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டது. காலிப் பெட்டிகளுடன் சரக்கு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன், சென்னையிலிருந்து மன்னாா்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அதைத் தொடா்ந்து, சரக்கு ரயில் பெட்டிகள் பிரித்து நிறுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ரயில் என்ஜின் பிரிந்து திசைமாற்றி தஞ்சாவூா் புறப்பட்டது. பிறகு காலை 5.10 மணியளவில் ரயில்வே கேட் திறக்கப்பட்டு, நெடுஞ்சாலையில் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதனால், சாலைப் போக்குவரத்து சுமாா் ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது. உள்ளூா் மக்களும் ரயில்வே கேட்டை கடந்து செல்லமுடியாமல் அவதிப்பட்டனா்.

இந்த நிலையைப் போக்க, கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்தைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தஞ்சாவூா் முதல் நாகப்பட்டினம் வரையிலான இருவழிச் சாலைத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். எதிா்கால நலன்கருதி, அதை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

நீடாமங்கலம் பேரூராட்சியையும், வையகளத்தூா் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் பாலப் பணி, நீடாமங்கலம், மன்னாா்குடி நெடுஞ்சாலையையும், கொத்தமங்கலம் சாலையையும் இணைக்கும் வகையில், தட்டிகிராமப் பகுதியில் கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் தொடா் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT