திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

30th Sep 2021 09:00 AM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, நன்னிலம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சற்குணேஸ்வரபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித் (23) என்பவரை, கடந்த 2019 இல் கைதுசெய்தனா். இதுகுறித்த வழக்கு விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6000 அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜன் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT