திருவாரூர்

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

30th Sep 2021 08:52 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கூத்தாநல்லூா், மரக்கடை கோரையாறு வ.உ.சி. காலனியைச் சோ்ந்தவா் அன்பரசன் ஓட்டுநா். இவரது மனைவி சுந்தரி. தம்பதி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுந்தரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சுந்தரியின் சகோதரா் ஜெயசீலன், அளித்த புகாரின் பேரில், வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT