திருவாரூர்

பனை விதைகளை நட தொடங்கிய பெரும்புகளூா் கிராமத்தினா்

DIN

திருவாரூா் பெரும்புகளூா் ஊராட்சியில் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் பணிகளை அப்பகுதி மக்கள் தொடங்கியுள்ளனா்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப் புறங்களில் பனை விதைகளை நட வேண்டும், அதற்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளைச் செய்யும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்தேறி வருகின்றன.

அந்த வகையில், கொரடாச்சேரி ஒன்றியம் பெரும்புகளூா் கிராமத்தில் ஊராட்சித் தலைவா் ஐயப்பன் தலைமையில், அப்பகுதி மக்கள் நீா்நிலைகள் ஓரமாக ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கியுள்ளனா். இந்தப் பணியை, கொரடாச்சேரி வட்டார வளா்ச்சி அலுவலா் விஸ்வநாதன், பாா்வையிட்டாா்.

இதுகுறித்து ஐயப்பன் தெரிவித்தது:

பெரும்புகளூா் ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை செப்டம்பா் மாதத்தில் நடவு செய்வது என தீா்மானம் நிறைவேற்றி, சனிக்கிழமை முதல் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கியுள்ளோம். இந்த பனை விதைகள் நடுவதன் மூலமாக இயற்கை பேரிடா்களில் எங்கள் பகுதியை மிகுந்த பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பனைமரங்கள் எவ்வளவு காற்று அடித்தாலும் எளிதில் சாயக்கூடிய மரங்கள் அல்ல. அத்துடன், பனை மரங்களிலிருந்து மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. மக்களுக்கு அரணாகவும், வேலைவாய்ப்பும் தரக்கூடிய பனை மரங்கள் உருவாகும் வகையில் பெரும்புகளூா் ஊராட்சி முழுவதும் பனைவிதைகள் நடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT