திருவாரூர்

பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகளுடன், எம்.எல்.ஏ. ஆலோசனை

15th Sep 2021 04:18 PM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகளுடன், மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆலோசனை நடத்தினார்.

பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கம் சார்பில், தலைவர் எஸ்.ஏ.மஹதூம் மைதீன், செயலாளர் எம்.எம்.ரஃபியுதீன் ஏற்பாட்டின் படி, மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவிடம், பொதக்குடி ஊராட்சியின் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

இதையும் படிக்க | தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மனுவில் கூறியுள்ளது. பொதக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைவதற்கு, மறைந்த ஏ.சர்புதீன் இடம் கொடுத்து, கட்டடத்தையும் கட்டி நன்கொடையாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறைக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

580 மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் அடிப்படை வசதிகளே செய்யப்படவில்லை. பழுதடைந்த இரண்டு மாடி கட்டடம் இடிக்கப்பட்டு, இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. மேலும், பள்ளிக் கூடத்தின் பின்புறத்தில் மதில் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது.

இதையும் படிக்க | இளநீர் எப்போது அருந்த வேண்டும்?

பள்ளிக் கூடத்திற்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட பொதக்குடி ஊராட்சியில், இ-சேவை மையம் அமைக்கப்பட வேண்டும். பொதக்குடியின் குளங்களை பராமரிப்பு செய்து, தூர்வாரப்பட்டு, நீச்சல் குளம் அமைத்துத் தர வேண்டும்.

மேலப்பள்ளி வாயிலுக்கு சொந்தமான தமிழன் கேணி குளத்தை தூர்வாரி சுற்றுப்புற தடுப்பு சுவர் அமைத்து, மின் விளக்கு பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். நிகழ்வில், நீடாமங்கலம் யூனியன் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் எஸ்.ராணி சேகர் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : திருவாரூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT