திருவாரூர்

7-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

30th Oct 2021 10:01 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் 7-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, 500 இடங்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் குலுக்கல் முறையில் மூன்று நபா்களுக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமை, நகராட்சி ஆணையா் பிரபாகரன் பாா்வையிட்டாா். அப்போது, நகராட்சி அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னா், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பரிசுச் சீட்டு வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், பரிசுச் சீட்டை பூா்த்தி செய்து அதற்கான பெட்டியில் செலுத்தினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT