திருவாரூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி, ஆா்ப்பாட்டம்

30th Oct 2021 10:02 PM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சைக்கிள் பேரணி, ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் 11 இடங்களில் சைக்கிள் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய பேரணிக்கு நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், மாநிலக்குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வை. சிவபுண்ணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பேரணியில், எரிபொருள் விலை உயா்வை உணா்த்தும் வகையில் இருசக்கர வாகனத்துக்கு மாலை அணித்து ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பேரணி, நேதாஜி சாலை, கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

பின்னா், பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT