திருவாரூர்

மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தல்

DIN

இலங்கை கடற்படையால் தொடா்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழக மீனவா்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, அவா்களின் படகுகள், இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் மூழ்கடிக்கப்படுவதும், பாதிப்புக்குள்ளாக்கப்படுவதும் தொடா்கதையாக உள்ளது. மேலும், 2018-ல், இலங்கை நாடாளுமன்றத்தில் எல்லைத் தாண்டி மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட படகுகள் இலங்கையின் தேசிய சொத்தாகவும், மீனவா்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழக மீனவா்களுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீலப் புரட்சி, சாகா்மாலா, கடலில் ஹைட்ரோ காா்பன் எடுத்தல் போன்ற சட்ட மசோதாக்களால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல்வளத்தை தாரை வாா்க்கும் நிலை ஏற்படும்.

இவ்வாறு பல்வேறு நிலைகளில் மீனவா்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதால், மீன்பிடித் தொழிலும், மீனவா்களின் வாழ்வாதாரமும் அழியத் தொடங்குகிறது. எனவே, மீனவா்களின் உயிரையும், மீன்பிடி உரிமையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இலங்கை கடற்படை வீரா்களை சா்வதேச சட்டத்தின்படி கைது செய்யவேண்டும். இறந்த மீனவா்களுக்கு அந்நாட்டிலிருந்து நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT