திருவாரூர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்கள் நாடாளுமன்றம்: இந்திய கம்யூ. முடிவு

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 100 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்துவது என மன்னாா்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிபிஐ ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா். வீரமணி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை பொதுமக்களிடம் விளக்கிடும் வகையில் மன்னாா்குடி ஒன்றியத்திற்குள்பட்ட 100 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்துவது என்றும், எரிபொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அக்டோா் 30 ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் துரை.அருள்ராஜன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பி. பாஸ்கரவள்ளி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் அ. வனிதா, மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா்.பூபதி, விவசாயிகள் சங்க தலைவா் ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT