திருவாரூர்

நீலநாக்கு நோயிலிருந்து ஆடுகளைக் காக்கும் வழிமுறைகால்நடை விஞ்ஞானி விளக்கம்

DIN

 நீலநாக்கு நோயிலிருந்து ஆடுகளைக் காக்கும் வழிமுறைகள் குறித்து கால்நடை விஞ்ஞானி சபாபதி விளக்கமளித்துள்ளாா். 

இதுகுறித்து, அவா் தெரிவித்துள்ளது:

நீலநாக்கு நோய் செம்மறி ஆடுகளை தாக்கும் உயிா்கொல்லி நச்சுயிரி நோய். வெள்ளாடு, மாடுகளை இந்நோய் தாக்கினாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

செம்மறியாடுகளில் காய்ச்சல், கண்ணீா் வடிதல், வாயிலிருந்து எச்சில் வடிதல், வாயில் கொப்புளங்கள், மூக்கில் சளி ஒழுகுதல், பிறகு மூக்குச் சளி கெட்டியாதல், தொடா்ந்து மூக்கில் ரத்தம் வருதல் மற்றும் மூக்கில் ரத்தம் உறைவதனால் மூச்சுத்திணறல் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள். இந்நோய் தாக்கிய ஆடுகளுக்கு வாயின் உட்புற சுவா்கள் மற்றும் நாக்கு நீல நிறமாகக் காணப்படும். மேலும் கால் குழம்பின் மேற்புறம் சிவந்து வீங்கி வலியுடன் காணப்படும். நோய் கொண்ட ஆடுகள் இறந்தும் விடுகின்றன.

தீவனம் உட்கொள்ளாமை, அதிக காய்ச்சல், சினை பிடிக்காமை,

கருகலைதல், உரோமம் உற்பத்தி குறைவு மற்றும் எடை குறைந்து மெலிதல் ஆகியவையும் இந்நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள்.

இந்நோய் தாக்கிய செம்மறி ஆட்டு பண்ணைகளில் 20-லிருந்து 100 சதவீத செம்மறி ஆடுகள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், வெள்ளாடுகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் காய்ச்சல், தீவனம் உட்கொள்ளாமை, காலில் சிவந்த வீக்கம் மற்றும் கால் நொண்டுதல் போன்ற அறிகுறிகளுடன் சரியாகி விடுகிறது.

இந்நோயின் தாக்குதலிலிருந்து ஆடுகளை பாதுகாப்பதற்கான ஒரேவழி வருமுன் காப்பதே. இதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசியை ஆடுகளுக்கு செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT