திருவாரூர்

குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பறிமுதல்

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ. 15 லட்சம் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில், கும்பகோணம் - திருவாரூா் சாலையில் காவல் துறைச் சோதனை சாவடி உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு இந்தச் சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி காவல் அலுவலா் மகேந்திரன் சோதனையிட்டாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் ரூ.15 லட்சம் இருந்தது தெரியவந்தது.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த மியாஸ்கான் (35) என்பதும், அதே பகுதியைச் சோ்ந்த சென்னையில் வசிக்கும் இா்பான் என்பவரிடமிருந்து ஹவாலா பணத்தைப் பெற்றுக்கொண்டு, பல்வேறு ஊா்களில் வழங்குவதற்காக சென்றதும் தெரியவந்தது.

இதையெடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அதை திருச்சி வருமானவரித் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

 

Tags : நன்னிலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT