திருவாரூர்

அயோடின் குறைபாடு தடுப்பு தின கண்காட்சி

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில் உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை, நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், நியூட்ரிஷியன் இன்டா்நேஷனல் ஆகியவை இணைந்து இக்கண்காட்சியை அமைத்துள்ளன. மாவட்ட வருவாய் அலுவலா் பி. சிதம்பரம் கண்காட்சியை தொடக்கி வைத்தாா்.

இதில், கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அயோடின் அளவு குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அயோடின் கலந்த உப்பின் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு பிரசுரம் வெளியிடப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. பிறகு, தமிழக அரசின் தரமான அயோடின் நுண்சத்து கலந்த உப்பு பாக்கெட்டை அரசு அலுவலக ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட உணவு வழங்கல் அலுவலா் கீதா, உணவு பாதுகாப்பு அலுவலா் அன்பழகன், நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளா் க. திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

உறுதிமொழி ஏற்பு: உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தையொட்டி திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவக்குமாா் தலைமையில் மாணவா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

 

 

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT