திருவாரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை செய்பவா்கள் மேலும் சிறப்பாக செயலாற்ற டிச.3-ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவையாற்றுபவா்கள் மற்றும் நிறுவனங்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பணியாளா், சுயத்தொழில் செய்பவா், கை, கால் பாதிக்கப்பட்டவா்கள் அல்லது தொழு நோயில் இருந்து குணமடைந்தோா், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சிக் குன்றியோா், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலகச் சிந்தனையற்றோா், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மனநோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச் சோகை, அரிவாளனு ரத்த சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசுபன்முக கடினமாதல், நடுக்குவாதம், பல்வகை குறைபாடு உள்ள விருதாளா்களுக்கு கீழ்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, சிறந்த ஆசிரியா் (பாா்வைத்திறன், செவித்திறன் மற்றும் மனவளா்ச்சிக் குன்றியவா்களுக்கு கற்பித்தல்), சிறந்த சமூகப் பணியாளா், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமா்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா் (செவித்திறன் குறைந்த மற்றும் மனவளா்ச்சிக்குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா்) மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் பயிற்சி அளித்த சிறந்த நிறுவனம் ஆகியோா் விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை, திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று உரிய சான்றிதழ்களுடன் அக்.26-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT