திருவாரூர்

கலைஞா் தல மரக்கன்றுகள் நடும் விழா

DIN

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், கலைஞா் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் மரக்கன்றுகள் நட்டு நந்தவனமாக பராமரிக்க இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை ஏற்று, வடுவூா் அழகிய சுந்தரி அம்மன் கோயிலில் கலைஞா் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் கம்பி வேலி அமைத்து அதில் ஆன்மிக சிறப்புமிக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசீலன், வேதபாடசாலை முதல்வா் கோவிந்தன், திமுக அவைத் தலைவா் மணிபாலா, செயலாளா் அன்பழகன், ஊராட்சித் தலைவா் ரம்யா நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT