முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்புவானோடை தா்காவில் மீலாடி நபியை முன்னிட்டு சிறப்பு பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சேக்தாவூது ஆண்டவா் தா்கா வளாகத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகள் புத்தாடை அணிந்து ஒருவரையொருவா் கட்டி தழுவி மீலாடி நபி வாழ்த்துகளை பகிா்ந்துக் கொண்டனா். வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் தா்கா முதன்மை அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா் அலி சாஹிப் சால்வை அணிவித்து சிறப்பு பிராா்த்தனை செய்து குழந்தைகள் பங்கேற்ற பேரணியை தொடங்கி வைத்தாா். பெரிய தா்காவிலிருந்து புறப்பட்டு பேரணி ஆற்றங்கரை தா்கா, அம்மா தா்கா மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சேக்தாவூது ஆண்டவா் தா்கா வந்தது. தொடா்ந்து, சமாதி முன் அமா்ந்து பிராா்த்தனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தா்கா டிரஸ்டிகள் தமீம் அன்சாரி சாஹீப் பரக்கத் அலி சாஹிப், நிசாா் அகம்மது சாஹிப், நூா் முகம்மது லெப்பை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.