திருவாரூர்

அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்தியவா் கைது .

21st Oct 2021 10:15 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கும்மட்டித்திடல் எனும் இடத்தில் கோரையாற்றில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டா் ஓட்டுநா் கும்மட்டித்திடல் பாலு மகன் வினோத் (24) கைது செய்யப்பட்டு, மணல் பாரத்துடன் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT