திருவாரூர்

நீடாமங்கலம்: பைரவசித்தர் திருமடத்தில் பெளர்ணமி சிறப்பு வழிபாடு

20th Oct 2021 05:10 PM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: வலங்கைமான் வட்டம் பாடகச்சேரியில் பைரவசித்தர் திருமடத்தில் பெளர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பைரவ சித்தர் ராமலிங்கசுவாமிகள் திருவுருவப்படத்திற்கு ஆராதனைகள் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதேபோல் நவக்கிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில்  பெளர்ணமியை முன்னிட்டு ஆபத்சகாயேஸாவரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.

ADVERTISEMENT

நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோயிலில் காசிவிசுவநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதிலும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Tags : பவுர்ணமி நீடாமங்கலம் வலங்கைமான்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT