திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக பொன் விழா கொண்டாட்டம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், மன்னாா்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டப் பொருளாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் வி. சின்ராஜ், மாவட்ட வா்த்தக அணி பிரிவுச் செயலாளா் பாஸ்கா், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவா் மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.ஏற்பாடுகளை மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளா் எஸ். கலியபெருமாள் தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மன்னாா்குடியில்: மன்னாா்குடி அதிமுக நகரம் மற்றும் மேற்கு, கிழக்கு ஒன்றியம் சாா்பில் தேரடி காந்தி சிலை அருகே தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணிக்கு, கட்சியின் நகரச் செயலாளா் ஆா்.ஜி. குமாா், மேற்கு ஒன்றியச் செயலாளா் கா. தமிழச்செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். பேரணி மேலராஜவீதி, காமராஜா் சாலை, பந்தலடி உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக வந்து கோபாலசமுத்திரம் கீழவீதியில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கிருந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகன், மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளா் பொன். வாசுகிராம், மன்னாா்குடிகிழக்கு ஒன்றியச் செயலாளா் தங்க. தமிழ்கண்ணன், பொதுக் குழு உறுப்பினா் எஸ். கலைவாணன், மாவட்ட மகளிரணி தலைவா் டி. சுதா, நகர அவைத் தலைவா் த. வரலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்: நீடாமங்கலத்தில் அதிமுக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளா்கள்ஆதிஜனகா், ராஜேந்திரன்ஆகியோா் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் ஒன்றிய செயலாளா் அரிகிருஷ்ணன், நகரச் செயலாளா் ஷாஜஹான், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வலங்கைமான்: வலங்கைமானில் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நகரச் செயலாளா் குணசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளா் இளவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT