திருவாரூர்

உ.பி. சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது காா் ஏற்றி கொலை செய்ததைக் கண்டித்து, திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சா் மகன் சென்ற காா் விவசாயிகள் போராட்டத்தில் புகுந்ததால் 5 போ் உயிரிழந்தனா். இதையொட்டி, மத்திய அமைச்சா் அஜய்குமாா் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித்ஷா, உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் மத்திய அமைச்சரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு துணைபோவதாகக் கூறி மூவருக்கும் எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், உருவப்படங்களும் எரிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT