திருவாரூர்

தொழிற்பயிற்சி நிலையங்களில் அக்.30 வரை மாணவா் சோ்க்கை

16th Oct 2021 10:08 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடிச் சோ்க்கை மூலம் அக்டோபா் 30 வரை மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூா் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர இணையதள கலந்தாய்வு முடிந்த நிலையில், காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் அக்டோபா் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மாணவா்கள் சேர விரும்பும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து நேரடி சோ்க்கை மூலம் தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவில் சோ்ந்து கொள்ளலாம். பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணி மற்றும் விலையில்லா பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும் இது தொடா்பான விரிவான விவரங்களுக்கு நீடாமங்கம் மற்றும் கோட்டூா் பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT