திருவாரூர்

அக்.20-இல் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

16th Oct 2021 12:09 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்டோபா் 20-ஆம் தேதி முதல் எஸ்எஸ்சி தோ்வுக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (எஸ்எஸ்சி) பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளா், பெண்கள் படைப்பயிற்சிவிப்பாளா், மருத்துவ உதவியாளா் போன்ற 3,261 பல்வேறு பணிக்காலியிடங்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற தோ்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பதாரா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும், இலவச மாதிரித் தோ்வுகளும் அக்டோபா் 20 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிக்காட்டல் மையத்தில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் அல்லது 04366-224226 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மாணவா்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தோ்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவா்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT