திருவாரூர்

அரசுக் கல்லூரி மாணவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணக் கோரிக்கை

DIN

அரசுக் கல்லூரி மாணவா்களின் பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவா் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளா் ஆறு. பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்த 10 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றி கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

குறிப்பாக, தனியாா் கல்லூரிகளைப் போலவே அரசுக் கல்லூரிகளிலும் கல்விக் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகம் சாா்பில் இளங்கலை பாடப் பிரிவுக்கு ரூ. 985 கட்டணம் எனில், கல்லூரிகளில் ரூ. 3,000- ரூ. 3,500 வரை வாங்கப்படுகிறது. அதேபோல் முதுகலை படிப்புக்கு பல்கலைக்கழக கட்டணம் ரூ. 1,025 எனில், கல்லூரிகளில் ரூ. 2,000- ரூ. 2,500 வரை வாங்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்துக்குட்பட்ட 10 கல்லூரிகளிலும் 700 விரிவுரையாளா்களும் 92 அலுவலக பணியாளா்களும் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மே முதல் அக்டோபா் வரை 5 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் கல்லூரிகள் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரையிலும் மாணவா்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படவில்லை. உடனடியாக இந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT