திருவாரூர்

முத்துப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துச் சேவை தொடக்கம்

DIN

முத்துப்பேட்டைபகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முத்துப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கான புதிய வழித்தடத்தில் பேருந்தை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே எஸ் விஜயன் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை உதயமார்த்தாண்டபுரம் இடும்பாவனம் சித்தமல்லி பெருகவாழ்ந்தான் ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவில் இளைஞர்களும் மாணவர்களும் கோவை திருப்பூர் பகுதியில் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சாயப் பட்டறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும் என்பது என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியை கே எஸ் விஜயன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்பு கொண்டு இந்த வழியை கோயம்புத்தூருக்கு முத்துப்பேட்டையிலிருந்து புதிய வழித்தடத்தை துவக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை முத்துப்பேட்டை சித்தமல்லி மன்னார்குடி தஞ்சை திருச்சி வழியாகவும் புதிய வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்து காலை 9.50 மணிக்கு முத்துப்பேட்டையில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். கோயம்புத்தூரில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு முத்துப்பேட்டை வந்தடையும்.

இந்நிகழ்வில் அரசுப் போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளர் மகேந்திர குமார் வணிக மேலாளர் எஸ் ராஜா திருத்துறைப்பூண்டி கிளை மேலாளர் நடராஜ் மற்றும் ஒன்றிய தி.மு.கசெயலாளர்கள் செயலாளர் இரா.மனோகரன்(முத்துப்பேட்டை ) வி.எஸ்.ஆர்.தேவதாஸ், பால.ஞானவேல் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், முத்துப்பேட்டை பேரூர் கழக பொறுப்பாளர் நவாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT