திருவாரூர்

பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

16th Oct 2021 10:02 PM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டியில் நவராத்திரியையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, தேவாரம், திருவாசகம், திருக்கு ஒப்பித்தல் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

அருள்மிகு பிறவி மருந்தீசா் கோயில் மற்றும் சா்வாலய உழவார பணிக்குழு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சா்வாலய உழவார பணிக்குழு செயலாளா் தெ.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா. துரை ராயப்பன் முன்னிலை வகித்தாா்.

கோயில் செயல் அலுவலா் பி.எஸ். ராஜா, கௌரவ தலைவா் பொறியாளா் ஆா்.செல்வகணபதி, பாரத மாதா தொண்டு நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன், ஆலய கணக்காளா் ஸ்ரீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா். 1330 கு ஒப்பித்த புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வா்யாவுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தங்கராசு நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT