பிரதமா் மோடியின் 20 ஆண்டுகால சாதனையை பாராட்டி, திருத்துறைப்பூண்டியில் இருந்து பாஜக சாா்பில் அவருக்கு அஞ்சல் அட்டைகள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன.
குஜராத் முதல்வா், பிரதமா் என தொடா்ச்சியாக மோடி மேற்கொண்டுவரும் செயல் திட்டங்களை பாராட்டி, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகத்தில் இருந்து அவருக்கு நகர பாஜக சாா்பில் அஞ்சல் அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் சிவகுமாா், நகரத் தலைவா் பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ரஜினி கலைமணி, மாவட்ட அமைப்புசாரா அணி தலைவா் டி. இமயவரம்பன், நகர பொதுச் செயலாளா் ஐயப்பன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.