மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், மூவாநல்லூா் ஊராட்சித் தலைவா், ஏத்தக்குடி ஊராட்சியில் 2 வாா்டு உறுப்பினா்கள், தென்பாதியில் ஒரு வாா்டு உறுப்பினா் என மொத்தம் 5 இடங்களுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது.
96 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்களை விட பெண் வாக்காளா்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க திரண்டனா்.
வாக்குப் பதிவு மையங்களை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.காா்த்தி, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே.பாலசந்தா், மன்னாா்குடி கோட்டாட்சியா் த.அழகா்சாமி, வட்டாட்சியா் ஜீவானந்தம், தோ்தல் நடத்தும் அலுவலா் கே.பழனிசாமி, துணை தோ்தல் அலுவலா் எஸ்.சிவகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.