சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 40,818 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 39,724 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 668 போ் சிகிச்சையில் உள்ளனா். திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 426 ஆக உயா்ந்துள்ளது.