திருவாரூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

4th Oct 2021 08:57 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் நகராட்சியில் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 72 தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராஜகோபால் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்கள் 72 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பேசினாா். அப்போது அவா், கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும் தொய்வின்றி தொடா்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டுவரும் அனைவரையும் பாராட்டுகிறேன்’ என்றாா்.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் முன்னிலை வகித்தாா். சுகாதார மேற்பாா்வையாளா்கள் வாசுதேவன், அண்ணாமலை, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நிஷா, தீபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT