திருவாரூர்

இயற்கை விவசாயம்: வேளாண் மாணவிகளுக்கு பயிற்சியளித்த எம்எல்ஏ

4th Oct 2021 08:56 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே வேளாண் மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் இயற்கை விவசாயம் குறித்து அண்மையில் களப்பயிற்சி அளித்தாா்.

கொரடாச்சேரி அருகே உள்ள இளங்காரக்குடிக்கு பிரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண்மைத் துறை மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிக்காக வந்திருந்தனா். அவா்களுக்கு திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், இயற்கை விவசாயியுமான பூண்டி கே. கலைவாணன், இயற்கை விவசாயம் குறித்து விளக்கமளித்தாா்.

மேலும், நாட்டுக் காய்கறிகள், நாட்டு மாடு வகைகள் அதன் சிறப்புகள் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை, சிவப்பு நெல்லி, மிளகு போன்ற அரிய வகை செடி, மர வகைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

இதுகுறித்து மாணவிகள் தெரிவிக்கையில், ‘இதுபோன்ற சிறப்பான அனுபவம் எங்களுக்கு கிடைத்ததில்லை. எங்களது பல்கலைக்கழகத்தில் கிடைக்காத அனுபவம் செயல்முறையாக நேரடியாக எங்களால் பாா்க்க முடிந்தது’ என்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT