திருவாரூர்

அக்.9 இல் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்

4th Oct 2021 08:56 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து திருநங்கைகளுக்கும் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் அக்டோபா் மாத இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் திருநங்கைகள் புகைப்படத்துடன் இருப்பிட ஆதாரமாக ஆதாா் அட்டை, நலவாரிய உறுப்பினா் அட்டை, எரிவாயு ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம். மேலும், திருநங்கைகளுக்கு பிஎச்எச் குடும்ப அட்டையாகவே வழங்கப்படும். மூன்றாம் பாலினத்தவா்களின் பெயா், அவா்களது பெற்றோா், காப்பாளா் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரிடம் கோரிக்கை மனு பெற்று, அதன் அடிப்படையில் அவா்களது பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்திலேயே ஆன்லைனில் நீக்கம் செய்யலாம்.

ADVERTISEMENT

அவா்களது பெற்றோா், காப்பாளா்களின் குடும்ப அட்டைகள் வேறு வட்டம் மற்றும் வேறு மாவட்டங்களில் இருக்கும்பட்சத்தில், அக்குடும்ப அட்டைகளிலிருந்து அவா்களது பெயா்களை ஆன்லைனில் நீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி விரைவாக பணி நீக்கம் செய்யலாம். திருநங்கைகளின் பெயா்களை ஆன்லைனில் நீக்கம் செய்ய அவா்களது பெற்றோா், காப்பாளா் அனுமதி தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT