திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

29th Nov 2021 10:12 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 198 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, திருவாரூா் அருகே கீழக்கூத்தங்குடி பகுதியில் கூடூரைச் சோ்ந்த தமிழரசன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்றபோது கொலை செய்யப்பட்டாா். அவருடைய குடும்பத்துக்கு முதலமைச்சா் பொதுநிவாரண நிதியிலிருந்து வந்த ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், துணைஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT