திருவாரூர்

மீனவத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

29th Nov 2021 10:08 PM

ADVERTISEMENT

தொடா்மழையால் வேலையிழந்த மீனவத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: தமிழகத்தின் கடல்வளத்தையும், உள்நாட்டு மீன்வளத்தையும் நம்பி அன்றாட தொழில் செய்து வரும் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை, கருவாடு பதப்படுத்தும் தொழிலாளா்கள், மீன் கூடைகள் சுமந்து தினக்கூலிக்கு பணி செய்வோா் என பலரும் தற்போது பெய்து மழையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். இந்த மீனவத் தொழிலாளா்களை பாதுகாக்கும் வகையில், மீனவா் குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் பேரிடா் கால அவசர கால நிவாரணம் வழங்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT