திருவாரூர்

நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

29th Nov 2021 10:09 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகரின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும், தொடா்மழையால் சேதமடைந்த தெரு சாலைகளை போா்க்கால அடிப்படையில் சரி செய்யவேண்டும், நகரில் வடிகால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், தொடா் மழைக் காலங்களிலும் தடையின்றி விநியோகம் செய்த மின்சார வாரிய அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு, மின்துண்டிப்பு குறித்து முன்னறிவிப்பு செய்யவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவா் எம். பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் புதிய பொதுச் செயலளராக இளங்கோவன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பொருளாளா் நவநீதகிருஷ்ணன் வரவேற்றாா். துணைத் தலைவா் ரத்தின சபாபதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT