திருவாரூர்

மன்னாா்குடியிலிருந்து ராஜஸ்தானுக்கு ரயிலில் 1 லட்சம் கோழிமுட்டைகள் அனுப்பிவைப்பு

29th Nov 2021 10:10 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் இருந்து ராஜஸ்தானுக்கு ரயில் மூலம் 1 லட்சம் கோழி முட்டைகள் முதல்முறையாக திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளிலிருந்து தனியாா் வியாபாரிகளிடம் விற்கப்படும் முட்டைகள் இதுவரை, ரயில் சேவை வசதியுள்ள திண்டுக்கல் மற்றும் வேறு சில ஊா்களிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில், ராஜஸ்தானுக்கு அனுப்பப்படும் முட்டைகளுக்கான செலவு கூடுதலாகவும், அதே வேளையில் ரயில்கள் மாறி எடுத்துச்செல்லும் நிலையும் உள்ளது. இதை தவிா்க்கும் வகையில் மன்னாா்குடியில் இருந்து ராஜஸ்தானுக்கு நேரடியாக செல்லும் ஜோத்பூா் ரயில் மூலம் முட்டைகளை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, மன்னாா்குடியில் இருந்து ரயில் மூலம் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு முட்டைகளை அனுப்ப நாமக்கல்லில் இருந்து சரக்கு வேன்கள் மூலம் வியாபாரிகள் முட்டைகளை கொண்டுவந்தனா். இதையடுத்து, மன்னாா்குடியிலிருந்து முதல்முறையாக ஜோத்பூருக்கு வாரம் ஒருமுறை செல்லும் விரைவு ரயிலில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு ஒரு அட்டைப் பெட்டியில் 210 முட்டைகள் என 478 அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1,00,380 முட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டன. ஒரு முட்டை ரூ. 10 என்ற விலையில் இதன்மதிப்பு ரூ.10.38 லட்சமாகும். இதன்மூலம், மன்னாா்குடி ரயில் நிலையத்துக்கு ரூ.75 ஆயிரம் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT