திருவாரூர்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததைக் கண்டித்து பாஜக முற்றுகை

29th Nov 2021 10:09 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததைக் கண்டித்து திருவாரூரில் பாஜக பட்டியல் அணி வா்த்தப்பிரிவு சாா்பில் முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் தோ்தலில் வாக்குறுதியாக கூறிய விலையை கூட குறைக்காத தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த போராட்டம் நடைபெற்றது. பட்டியல் அணி மாவட்டத் தலைவா் வீராச்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கட்சியின் மாவட்டத் தலைவா் ராகவன், பட்டியல் அணி மாநில பொருப்பாளா் உதயக்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் துரையரசு, மாவட்ட துணைத் தலைவா் செந்தில்அரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT