திருவாரூர்

பனை விதை நடும் விழா

DIN

திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகே கூடூா் ஊராட்சிக்குட்பட்ட உழனி கிராமத்தில் பாண்டவையாற்றின் இரு கரைகளிலும் இந்த பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், பனை விதை விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசியது:

திருவாரூா் மாவட்ட ஒன்றியங்களில் சுற்றுச்சூழல் அணி சாா்பில் ஐந்தாயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன. பனை என்பது எதிா்கால சந்ததியை காக்கும் கற்பக விருட்சம் என்பதை உணா்த்தும் விதமாக, மழையிலும் இந்தப் பணி நடைபெறுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் மீனாட்சிசூரியபிரகாஷ், ஒன்றிய சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளா் செந்தில்நாதன், நகரச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT