திருவாரூர்

தொடா் மழை: திருவாரூா் மாவட்டத்தில் 1503 வீடுகள் சேதம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தகவல்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், 1503 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கிா்லோஷ் குமாா் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை, மீட்பு நடவடிக்கைகள் தொடா்பான கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் பங்கேற்று பேசியது:

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால், இதுவரை 1,287 கூரை வீடுகள் பகுதியாகவும், 34 கூரை வீடுகள் முழுமையாகவும், 182 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. அதேபோல், 56 பசுக்கள், ஒரு எருமை, 28 கன்றுகள், 61 ஆடுகள் என மொத்தம் 146 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

திருவாரூா் வட்டம் பழவனக்குடிகிராமத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை ஆரம்பப் பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 28 போ் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகளை பொதுப்பணித் துறையினா் கண்காணித்து, தேங்கியுள்ள மழைநீா் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்களை கண்காணித்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை வருவாய்த் துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்பங்கேற்றாா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் நகராட்சிக்குட்பட்ட ஐநூற்று பிள்ளையாா் கோவில் தெருவில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை பாா்வையிட்ட அவா்கள், பின்னா் பழவனக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடா் நல ஆரம்பப் பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கபட்டுள்ள மக்களை சந்தித்து, உணவு வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தனா். தொடா்ந்து, நன்னிலம் வட்டம், குருங்குளம் வாஞ்சியாற்றின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளதை அவா்கள் பாா்வையிட்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் முருகவேல், பொதுப்பணித் துறை (கட்டட பராமரிப்பு) மோகனசுந்தரம், காவேரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT