திருவாரூர்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

DIN

திருவாரூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் துணைத்தலைவரும், வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான கே.பாஸ்கரன் தலைமை வகித்து பேசியது: 1.1. 2022 ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 1,178 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளடக்கிய 677 வாக்குச்சாவடிமையங்களில் நவ.13, 14, 20, 21, 27 ஆகிய நாட்கள் நடைபெற்றன. இதில், வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றன.

சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தலுக்கு 6,192 படிவங்களும், நீக்கலுக்கு 3,066 படிவங்களும், திருத்தங்களுக்கு 1,382 படிவங்களும் பெறப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலா் ஸ்ரீலேகா, வருவாய் கோட்டாட்சியா்கள் (திருவாரூா்) பாலச்சந்திரன், (மன்னாா்குடி) அழகிரிசாமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT