திருவாரூர்

திருக்கு முற்றோதல் பரிசு பெற நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

25th Nov 2021 10:43 PM

ADVERTISEMENT

திருக்கு முற்றோதல் பாராட்டு பரிசு பெற, வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.10,000 வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவா்களுக்கான திறனாய்வு, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூன்றாம் தளத்திலுள்ள தமிழ் வளா்ச்சித் துறையால் நடத்தப் பெறும்.

விதிமுறைகள்: 1330 திருக்குகளையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இயல் எண், பெயா், அதிகாரம் எண், பெயா், கு எண், பெயா் போன்றவற்றை தெரிவித்தால், அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயா்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருக்க வேண்டும்.

திருவாரூா் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்வோராக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பதின்மப் பள்ளிகள் போன்றவற்றில் 1- 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்படும் இப்பரிசை இதற்கு முன்னா் பெற்றவராக இருக்கக் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

ADVERTISEMENT

தகுதியுள்ள மாணவா்கள்,  வலைதளத்திலிருந்து விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, நிறைவுசெய்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 3 ஆம் தளத்தில் உள்ள மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 04366 224600 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT