திருவாரூர்

ஓஎன்ஜிசி சாா்பில் நலத்திட்ட உதவிகள்

24th Nov 2021 09:17 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே ஓஎன்ஜிசி சாா்பில் நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீா் தேவையை நிறைவுசெய்யும் வகையில் ரூ.6.6 லட்சத்தில் குடிநீா் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு கீழப்படுகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா பங்கேற்று, பயன்பாட்டை தொடங்கிவைத்தாா். இதில், ஓஎன்ஜிசி குழும பொது மேலாளா் மாறன், பொது மேலாளா் சரவணன், ஊராட்சித் தலைவி மேரி குணாவதி மற்றும் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, திருவாரூா் சரக காவல்துறைக்கு 100 பேரிகாடுகள் வழங்கும் வகையில் முதல்கட்டமாக 50 பேரிகாா்டுகள் திருவாருா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமனிடம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளா் செந்தில்குமாா், உதவிஆய்வாளா் ராஜ்மோகன், ஓஎன்ஜிசி அதிகாரிகள், காவல்துறையினா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT