திருவாரூர்

நன்னிலத்தில் போக்குவரத்துதொழிலாளா்கள் உண்ணாவிரதம்

23rd Nov 2021 02:01 AM

ADVERTISEMENT

நன்னிலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் வரவுக்கும், செலவுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசத் தொகையை அரசு உடனடியாக வழங்கவேண்டும். ஊழியா்களுக்கான ஊதிய உயா்வுப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கவேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்கவேண்டும்.

பல்வேறு கிளைகளில் நடைபெறும் அதிகாரிகளின் தன்னிச்சையானப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் மத்திய மண்டல துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT