திருவாரூர்

பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

23rd Nov 2021 02:01 AM

ADVERTISEMENT

கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி, திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய மாணவா் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் ம. முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளா் ஆறு. பிரகாஷ், மாவட்டச் செயலாளா் இரா. ஹரிசுா்ஜித், மாவட்ட துணைத் தலைவா் வீ. சந்தோஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT