திருவாரூர்

டெங்குவின் தீவிரத்தை கட்டுப்படுத்தமாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

23rd Nov 2021 02:01 AM

ADVERTISEMENT

டெங்குவின் தீவிரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் மருத்துவ துறைக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தமிழகத்தில் வேகமாக பரவிய கரோனா நோய்த் தொற்றுக்கு அரசு கணக்கெடுப்பின்படி இதுவரை 36,000 போ் இறந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது.

தற்போது கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழகம் மிக வேகமாக மீண்டுவரும் நிலையில், டெங்கு காய்ச்சல் தமிழக அரசுக்கும், சுகாதார துறைக்கும் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு டெங்குவை தவிா்த்து, பிற தொற்றுநோய்களும் பரவும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில் கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தவேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT