திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 288 மனுக்கள்

23rd Nov 2021 02:03 AM

ADVERTISEMENT

திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் 288 கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் தரப்பில் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றை பரிசீலித்து குறித்த காலத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்மணி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT