திருவாரூர்

மழை பாதித்த பயிா்களுக்கு நிவாரணம் கோரி மனு

9th Nov 2021 12:01 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா- தாளடி பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமையில் விவசாயிகள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா- தாளடி பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த 2020- 21ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை விடுபட்ட கிராமங்களுக்கும் வழங்கவேண்டும். சம்பா சாகுபடி பயிா்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி நவ.15 என்பதை 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT