திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில், தீபாவளிப் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூா் நகராட்சி, பனங்காட்டாங்குடி, தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி ஆகிய இடங்களில் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிகள் அமைந்துள்ளன. இப்பள்ளிகளில், மாற்றுத்திறன் கொண்ட மனவளா்ச்சிக் குன்றிய 75 போ் உள்ளனா்.
இதன் நிறுவனா் ப.முருகையன், நிா்வாகி மகேஸ்வரி முருகையன் ஆகியோரின் ஏற்பாட்டின்பேரில், மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகள் தீபாவளி தினத்தன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பிராா்த்தனை செய்தனா். பின்னா், அனைவரும் மத்தாப்பு கொளுத்தி தீபாவளியை கொண்டாடினா்.
அவா்களை பயிற்சியாளா்கள் அனுராதா, செளமியா, கனிமொழி, மேலாளா்கள் சுரேஷ், வினோத், ராஜா ஆகியோா் கண்காணித்தனா்.