திருவாரூர்

வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

5th Nov 2021 09:30 PM

ADVERTISEMENT

 திருவாரூா் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 12 பவுன் நகை புதன்கிழமை திருடப்பட்டது.

கொரடாச்சேரி அருகே காவனூரில் வசிப்பவா் பிரகாஷ் (60). இவா், திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவதால், அவரது மனைவி கோகிலா மட்டுமே வீட்டில் வசித்து வருகிறாா். இதனிடையே, மகளைப் பாா்க்க கோகிலா திருச்சிக்கு சென்றுவிட்டு, தீபாவளியையொட்டி தனது வீட்டுக்கு திரும்பியதாக தெரிகிறது.

அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்திருந்ததைக் கண்டவா், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 12 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ 5 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT