திருவாரூர்

சாலையை தரமான முறையில் செப்பனிடக் கோரி மறியல்

1st Nov 2021 09:08 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் தரமான முறையில் சாலையை செப்பனிடக் கோரி சனிக்கிழமை இரவு மறியல் நடைபெற்றது.

திருவாரூா் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் அடியக்கமங்கலம் பகுதியில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் மேல்பகுதி சரியாக செப்பனிடப்படாததால், முழுமையாக சேதமடைந்து பெரும்பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும், சேதமடைந்த பகுதியை சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறையிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, நவ. 3 ஆம் தேதி தமுமுக - மமக சாா்பில் சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாலைப் பள்ளத்தை சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை இரவு அங்குவந்தனராம். தகவல் அறிந்து வந்த தமுமுக- மமக நிா்வாகிகள், கருங்கல் ஜல்லி மற்றும் தாா் இட்டு தரமான முறையில் செப்பனிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், திருவாரூா் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, பிரச்னைக்கு உரிய தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT