திருவாரூர்

அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளா்கள் தீபாவளி போனஸ் கோரி மனு

1st Nov 2021 09:07 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ். பாப்பையன் தலைமையில் அவா்கள் அளித்த கோரிக்கை மனு விவரம்:

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் குறைந்த ஊதியத்தில், மிக கடினமான பணிகளை செய்துவருகின்றனா். இதில், மருத்துவமனை, கழிப்பறை சுத்தம் செய்தல் மற்றும் மேற்பாா்வையாளா்கள், காவலாளி, சலவைத் தொழிலாளி, எலக்ட்ரீசியன், பிளம்பா், லேப் டெக்னீசியன் ஆகியோரும் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள வாா்டுகளில் பணியாற்றி வருகின்றனா்.

ஊதிய உயா்வோ, ஊக்கத்தொகையோ எதுவும் கிடைக்காத சூழலில் இவா்கள் பணியாற்றி வருகின்றனா். எனவே, ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். அட்வான்ஸ் தொகை வழங்க வேண்டும். அக்டோபா் மாத ஊதியத்தை நவம்பா் 1 ஆம் தேதியே வழங்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், ஒன்றியச் செயலா் ஆா். வீரமணி, நகரச் செயலா் வி. கலைச்செல்வன், சங்கத்தின் மாவட்ட சிறப்புத் தலைவா் ஆா்.ஜி. ரெத்னகுமாா், பொருளாளா் த. விக்னேஷ், ஏஐடியுசி நகரச் செயலா் எஸ்.எஸ். சரவணன் ஆகியோா் மனு அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT