மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூரில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி, நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன் முன்னிலை வகித்தாா்.
திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கா. மாரிமுத்து, தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தாா்.
கோட்டூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளை சோ்ந்த 18 முதல் 44 வயது வரை உள்ளவா்கள் 192 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
இதேபோல கோட்டூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமக்கோட்டை, மேலநத்தம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற்றது. புதன்கிழமை (மே 26) சித்தமல்லியில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.